மனித நேயநம்பிக்கை நிதியத்தின் நிதி உதவியுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற Office management & IT இரண்டாவது தொகுதி மாணவர்களின் பெற்றோருடனான கலந்துரையாடல் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் நடைபெற்றது.
கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்கள் மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் முகாமையாளர் திரு.ராஜு கபீரியல் அவர்களினால் நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடலில் இப் பயிற்சியின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பான விளக்கத்தைத் தொடர்ந்து அடிப்படையான கணினி அறிவினை வழங்கிடும் நோக்கிலே இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளமை தெளிவூட்டப்பட்டது.
பாடசாலைக் கல்வியின் பின்னர் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் இளைஞர் யுவதிகள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களை வலுவூட்டுவதற்கு இப்பயிற்சி ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.