பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் மரபிற்கு ஏற்ப தமிழர் வழி வந்த பண்டிகையாம் தீபாவளிப் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வாறே அதிகாலையில் நீராடி புத்தாடை அணிந்து இல்லங்களில் விளக்கேற்றி ஒளி பெருக்கி தீபத்திருநாளை கொண்டாடுவது எமது வழக்கம்.
அந்த வகையில், அனைவர்க்கும் புத்தாடை எனும் கருப்பொருளில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையம், ஜீவானந்தா மகளிர் இல்லம், வாழும் கலை நம்பிக்கை நிதியம் ஆகிய எமது திட்டப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு தலா 5000 LKR வீதம் புத்தாடைகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதன் மூலம் எம்மால் இயன்ற புத்தாடைகளை அவர்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களை மகிழ்விக்கும் செயலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
எனவே, இல்லங்களில் வாழும் சிறுமிகளின் உள்ளங்களில் ஒளியேற்ற நீங்களும் எம்முடன் இணைந்து இறையருளைப் பெற்றிடுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு,
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
https://wa.me/94777105569