திறமைகளும் ஆற்றல்களும் இருந்தாலும் கூட வெளிக்கொணர்வதற்கான தைரியம் இன்மையே இன்றைய கால மாணவ சமுதாயத்தினரின் பாரிய சவாலாக அமைகின்றது. ஆதலால், சிறுவயது முதல் இளம் தலைமுறையினருக்கு வாழ்வியலை எடுத்துரைப்பதன் மூலம் எண்ணற்ற சாதனைகளுக்கு இயல்பானவர்களாக அவர்களை மாற்ற முடியும்.
அந்தவகையில், பழுகாமத்தில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்லத்தில் பயிலும் மாணவிகளுக்கான ஒருநாள் வாழ்க்கைதிறன் செயலமர்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைதிறன் பயிற்சி பெற்ற சேவையாளர் குழுவினரால் நடாத்தப்பட்டது.
தரம் 9 மற்றும் தரம் 10 ஐச் சேர்ந்த 15 மாணவிகள் இச்செயலமர்வில் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான சமாளிக்கும் திறன்கள் பற்றிய தெளிவூட்டல் வழங்கப்பட்டு சமாளிக்கும் திறன்களின் அவசியம் பற்றியும் அதனால் எதிர்கால வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மாணவிகளுக்கான சிறு செயற்பாடுகளும் வழங்கப்பட்டு இச்செயலமர்வு மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முறையான விதத்தில் பயம் மற்றும் வெட்கம் போன்ற உணர்ச்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் எந்த ஒரு மாணவ மாணவியரும் தமது வாழ்க்கையில் மிளிரலாம். அவ்வாறே கோபத்தை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம் ஒரு சிறந்த மனிதராக திகழலாம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.
இவ்வாறான செயலமர்வுகளுக்குப் பங்களிப்பு செய்வதன் மூலம் சமுதாய மாற்றத்திற்கான பங்களிப்பை நீங்களும் மேற்கொள்ளலாம்
மேலதிக தகவல்களுக்கு,
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
https://wa.me/ +94777105569
















