விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நடைமுறைப்படுத்தலூடாகப் பாடசாலைகளின் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளை வருடாந்தம் நடாத்தி வருகின்றது.
அந்த வகையில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கல்லூரிகளை மையப்படுத்தியதாக களுதாவளை, பட்டிருப்பு, பழுகாமம், மண்டூர், முனைக்காடு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை, அரசடித்தீவு, வந்தாறுமூலை, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக 13 பாடசாலைகளில் கல்வி பயிலும் 1060 மாணவர்களுக்கான ஆங்கிலம், பொது அறிவு, மற்றும் தொழிநுட்பவியல் பாடங்களுக்கான கருத்தரங்குகள் செவ்வனே நடைபெற்றது.
இவ்வாறான கருத்தரங்குகள் மாணவர்களை செம்மைப்படுத்துவதற்காக மட்டுமின்றி பரீட்சைக்கான மேலதிக தயார்படுத்தலாகவும் அமையும் என்பது சிறப்பானது.

















