மாணவர்களின் மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக மாணவர்களையும் தாண்டி பாடசாலைகளில் இருந்து விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கமைவாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியினரின் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்கான Printer வழங்கப்பட்டது. எமது திட்டமுகாமையாளர் உள்ளிட்ட கள சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது நிதி அனுசரணையை வழங்கிய கனடாவில் வசிக்கும் திரு.கோபால் பகீரதன் அவர்களுக்கு எமது அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



