எமது மனிதநேய சமுதாய கல்லூரிக்கு கரடியனாறு மகா வித்தியாலயத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர்களின் ஒளிவிழாவிற்கான உபசார அனுசரணை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கி வைக்கப்பட்டது.
ஏறத்தாழ 300 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றதோடு இந்நிகழ்வில் எமது திட்ட முகாமையாளர் உள்ளிட்ட கள சேவையாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது அனுசரணையை வழங்கிய அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இராமச்சந்திரன் மதிவண்ணன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.










