கிராமங்கள் தோறும் கணினிப்புரட்சி எனும் தொனிப் பொருளில் கிராமங்களுக்குச் சென்று வாராந்த வகுப்புக்களை நடத்துவதன் மூலம் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கான அடிப்படைக்கணினி அறிவினை நாம் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் உலகம் தொழில்நுட்பத்தின் உச்சத்தை எட்டிக்கொண்டிருக்க நம் சமூகத்தில் கணினியினை பயன்படுத்திக் கூட பார்க்காத இளம் சந்ததி இருக்கத்தான் செய்கின்றது. எனவே கிராமந்தோறும் அவர்களை மையப்படுத்தி 3 மாதகாலத்திற்கு ஒரு கிராமத்தில் மடிக்கணினிகள் மூலமாக நடமாடும் பயிற்சியாக நடைபெறும் இச் செயற்பாட்டிற்கு இரண்டாவது கிராமமாக ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மட்/மட்/செல்வாநகர் சிவா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான அடிப்படைக் கணினி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.
எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் அனுசரணையுடன் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நடைமுறைப்படுத்தலினூடாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இளம் தலைமுறையினரிடையே கணினிக் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி எதிர்காலத்தின் தொழிநுட்பப் புரட்சிக்கும் அவர்களைத் தயார்படுத்துவதாக அமையும்.
இச் செயற்பாட்டிற்கு மடிக்கணினிகளை மனிதநேய நிதியம் வழங்கியிருந்தமைக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இச் செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்து நடாத்துவதற்கு ஆர்வமுள்ள எம் உறவுகள் எம்முடன் இணைந்துகொள்ள முடியும்.