எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமுதாயத்தில் தேவைப்பாடுடைய பயனாளிகளை இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவியினை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.புவிக்குமார் தர்மினி ஆகியோரின் மகன் டிலன் என்பவரின் 12 வது பிறந்த தினத்தை முன்னிட்டு
ஆரையம்பதி செல்வாநகர் பிரதேசத்தில் வசிக்கும் திருமதி.இ.தனலெட்சுமி அவர்களுடைய பூரணமாக்கப்படாமல் தகரத்தினால் இருந்த வீடு திருத்தங்கள் செய்யப்பட்டு கற்களால் பூரணப்படுத்தப்பட்டது.
திருமதி.இ.தனலெட்சுமி கணவரைப் பிரிந்த நிலையில் மரக்கறி வியாபாரம் செய்து பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளையும் அன்றாட வாழ்க்கைச் செலவினையும் கவனித்து வந்த வேளையில் எமது அறக்கட்டளைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக எமக்கு கரம் கொடுத்த கனடாவில் வசிக்கும் எமது நீண்டநாள் நன்கொடையாளராகிய திரு. இளையதம்பி ஏகாம்பரம் ஐயா அவர்களுக்கும் அவரின் மகளின் குடும்பம் திரு.திருமதி.புவிக்குமார் தர்மினி தம்பதியர் ஆகியோர்க்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு செல்வன்.பு.டிலனுக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.










மேலதிக விபரங்களுக்கு https://youtu.be/XOdfMEjnbK8