பாலர் பாடசாலை மாணவர்களுக்கான வலுவூட்டலை வழங்கும் வண்ணம் சிறுவர் பராமரிப்பு திட்டம் எனும் தொனிப் பொருளில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பாலர் பாடசாலைகளுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலையில் பயிலும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது.
எமது சேவையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாட்டில் எமது திட்டங்கள் பற்றிய தெளிவூட்டல் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாது அவர்களுக்கான எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டமை சிறப்பானதாகும்.
இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக எம்முடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.









