புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள், விசேட தினங்களுக்கான ஆடைகள் என பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் எமது விவேகானந்த இளைஞர் கழகத்தினரால் ஜீவானந்தா இல்லத்தில் சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டதோடு எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களும் ஜீவானந்தா இல்லத்தில் வசிக்கும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இளைஞர்களிடைய சமூகம் பற்றிய சிந்தனையினை உருவாக்கவதுடன், மாணவர்களிடையே சூழலை சுத்தம் செய்வதன் அவசியம் பற்றி எடுத்துரைப்பதோடு மட்டுமல்லாது முறையான பழக்க வழக்கங்களையும் கட்டியெழுப்புவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.