விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது இளைஞர் யுவதிகளின் வாழ்வின் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொழிற்கல்வியை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் இந்திய உயர்ஸ்தானிகத்தின் ஒரு பகுதியான விவேகானந்த கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி அங்குறன் டாட்டா அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து எமது கல்லூரியின் பயிற்சிநெறிகள் மற்றும் எமது செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
அதன் பின்னர் பயிற்சிகள் பற்றிய விளக்கங்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளரான திரு.க.பிரதீஸ்வரன் அவர்களினால் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆலோசனைகளும் பெறப்பட்டது.
இவ்வாறான திறன் விருத்தி செயற்பாடுகள் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதொன்று என்பதுடன் அது சம்பந்தமாக தமது எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிவித்ததுடன் கல்லூரியின் எதிர்கால விரிவாக்கல் சேவைகள் மற்றும் புதிய பயிற்சித்திட்டங்ள் பற்றியும் கேட்டறிந்து எதிர்கால செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறு கல்லூரிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு எதிர்காலச் செயற்பாடுகள் பற்றிய தெளிவினை பெற்றதோடு இதற்கான ஆலோசனைகளையும் வழங்கி சென்ற பேராசிரியர் கலாநிதி அங்குறன் டாட்டா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.






