இன்றைய இளம் தலைமுறையினரிடையே சேவை மனப்பாங்கை கட்டியெழுப்புவது எமது கடமையாகும்.
அந்த வகையில் எம்முடன் இணைந்து பணியாற்றும் அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்களுடனான வருடாந்த கலந்துரையாடல் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது.
இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டலை அடுத்து எதிர்வரும் ஆண்டிற்கான செயற்பாடுகள் பற்றியும் அறக்கட்டளையுடனான அவர்களின் பயணம் தொடர்பிலும் தெளிவாகக் கலந்துரையாடப்பட்டது.
எம்முடன் இணைந்து செயலாற்றும் எமது அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.







