Community Development in Mavilangathurai

The Mavilangathurai Welfare Organization, in partnership with the temple administration and the alumni of the local school, organized a remarkable event to honor students who achieved excellence in academics, sports, and extracurricular activities in 2024.

The event, held on Monday, December 16, 2024, at the Mavilangathurai School Hall, was led by the founder of the Mavilangathurai Welfare Organization, Mr. V. Kasinathan. The celebration featured Ms. Thatchinakowri Dinesh, Divisional Secretary of Manmunai Pattu, as the Chief Guest and Mr. K. Pratheeswaran, Executive Director of the Vivekananda College of Technology, as the Special Guest. Distinguished participants included school principal Mr. K. Thilipan, village officer Mr. K. Parithiraj, temple board president Mr. K. Yogarajah, Samurdhi development officers, rural economic development officers, and members of the school development committee.

Celebrating Student Achievements The event celebrated outstanding student accomplishments:

  • High achievers in the G.C.E. Ordinary Level examinations.
  • A student who earned the Presidential Award for Environmental Protection.
  • Athletes who excelled at district and provincial levels.
  • National-level participants in karate tournaments.

A Collaborative Effort for Development

These collective efforts, supported by the temple administration, have been instrumental in fostering community development.

The school principal emphasized that the village’s 80% pass rate in the G.C.E. Ordinary Level examinations this year marks a significant milestone in educational progress and reflects the commitment of the community toward a brighter future.

Sustainable Growth Through Local Empowerment

The event highlighted the importance of self-reliant development driven by local resources and active participation from residents. Empowering communities to take charge of their growth ensures sustainable and long-lasting development, which serves as a model for other villages.

VCF’s Role in Mavilangathurai’s Progress

The Vivekananda Community Foundation (VCF) has been actively supporting Mavilangathurai for over four years through various educational and social initiatives:

  • Financial assistance for Aranery schools.
  • Monthly scholarships for G.C.E. Ordinary Level graduates pursuing advanced studies.
  • Free English and Sinhala language classes.
  • Aid for preschools.
  • Youth empowerment programs to promote social development.

VCF’s efforts focus on leveraging the village’s human and physical resources to create sustainable development. By nurturing education and fostering community-driven initiatives, VCF aims to inspire other villages to follow similar paths.

A Vision for the Future

The collaborative efforts in Mavilangathurai demonstrate the power of unity in achieving development goals. VCF remains committed to its mission of empowering marginalized communities, ensuring that education and social development remain central to progress.

To support our initiatives and learn more about VCF’s impactful programs, visit www.vcf.lk

Join us in empowering communities and building a sustainable future!



ஆலய நிர்வாகம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் குழுவுடன் இணைந்து கல்வி, விளையாட்டு மற்றும் பிரத்தியேக செயற்பாடுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வண்ணம் அதற்கான நிகழ்வினை பாடசாலை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடாத்தினர்.

இந்த விழா மாணவர்களின் சாதனைகளை பாராட்டுவதுடன் மட்டுமன்றி இக்கிராமத்தினரின் ஒற்றுமையைப் பலப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவிலங்கத்துறை சமூக நலன்புரி அமைப்பின் ஸ்தாபகர் திரு. வ.காசிநாதன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டதோடு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சினகௌரி தினேஷ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்கள் சிறப்பு அதிதியாக நிகழ்வில் பங்குகொண்டார்.

மேலும், பாடசாலை அதிபர் திரு.கே.திலிபன், கிராம சேவை உத்தியோகத்தர் திரு.கே.பரிதிராஜ், ஆலய பரிபாலனசபை தலைவர் திரு.கே.யோகராஜா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர் குறிப்பாகக் க.பொ.த சாதாரண தரத்தில் சிறப்பாக சித்தியடைந்த மாணவர்கள்,
சுற்றாடல் பாதுகாப்புக்குழு சார்பில் ஜனாதிபதி விருதினை பெற்ற மாணவி,
மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த மாணவர்கள், கரம் விளையாட்டில் தேசிய ரீதியில் பங்கேற்ற மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலையின் வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

கிராமத்தின் சமூக மேம்பாட்டில் இந்நிகழ்வு முக்கிய பங்கு வகிக்கின்றமை சிறப்பானதாகும். இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் 80% இற்கும் மேல் சித்தியடைந்தமை கல்வி வளர்ச்சியின் முக்கிய முன்னேற்றமாகும்.

மாவிலங்கத்துறை ஒரு சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமமாக இருந்தாலும் கூட இப்பகுதியில் உள்ள பழைய மாணவர்களும் வெளிநாடுகளில் வாழும் உறவுகளும் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை கடந்த 4 ஆண்டுகளாக அறநெறி பாடசாலைக்கு தேவையான உதவிகள், சாதாரண தரம் முடித்து மேலதிக கற்றலுக்கு தேவையான மாணவர்களுக்கான மாதாந்த கல்வி கொடுப்பனவு, ஆங்கிலம் மற்றும் சிங்களம் போன்ற கூடுதல் பாட வகுப்புகள், பாலர் பாடசாலைக்கு தேவையான உதிரிகள் மற்றும் வசதிகள்,
இளைஞர்களை வலுப்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் இம் மாவிலங்கத்துறை கிராமம் அங்கிருக்கும் மனித மற்றும் பௌதீக வளங்களை பயன்படுத்தி நிலையானதொரு வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகள் கிராம மக்களின் ஒற்றுமையை பலப்படுத்துவதில் மட்டுமல்லாது அவர்களின் எதிர்காலத்திற்கும் நிரந்தரமான வளர்ச்சிக்கான ஒரு அடித்தளமாக இருக்கும் என்பது சிறப்பானது. அவ்வாறே எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டங்களூடாக கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்பாடுகளில் மற்ற கிராமங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்து சமூக மேம்பாட்டின் புதிய பாதையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *