ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்துண்டு நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழாவாகும். அதற்கிணங்க எமது விவேகானந்த குடும்பத்தினரால் இன, மத, பேதங்களின்றி அனைத்து மாணவர்கள் மற்றும் சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் உழவர் திருநாள் இன்றைய தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா நிறுவனம், சமூக நலன்புரி அமைப்பு உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் பங்கு பற்றியதோடு மட்டுமல்லாமல் முட்டி உடைத்தல், கயிறிழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளும் நடாத்தப்பட்டு எமது மாணவர்கள் மற்றும் சேவையாளர்களின் பங்களிப்புடன் தைத்திருநாள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த விவேகானந்த குடும்பத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு அனைவருக்கும் எமது சமுதாய அறக்கட்டளை சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.