தொன்று தொட்டு வந்த தமிழர் மரபென இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் அடையாளப்படுத்தப்பட்டுப் பரந்து விரிந்து பல கலைஞர்களாலும் கையாளப்பட்டு இன்றைய கால ஓட்டத்தில் மருவி வந்த தற்காப்புக்கலைகளில் சிலம்பம் முக்கியம் பெறுகின்றது. ஆண், பெண் பேதமின்றி இன்றைய காலகட்டத்தில் சிலம்பம் பல பிரதேசங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதற்கிணங்க எமது மரபுக் கலைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் பாரிய கடமை எமக்குள்ளது.
அந்த வகையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக ஸ்தாபிக்கப்பட்ட முல்லைத்தீவு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் கல்வி பயிலும் மாணவிகள் கராத்தே, யோகா போன்ற பல்வேறு கலைகளிலும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கும் அதே வேளை கடந்த வருடம் 18 மாணவிகள் வடமாகாண கராத்தே போட்டியில் பங்குபற்றி 16 பதக்கங்களையும் பெற்றுக் கொண்டதோடு எதிர்வரும் தினங்களில் சிலம்பம் போட்டியில் பங்குபெறவுள்ளமை சிறப்பானதொரு விடயமாகும்.
சிலம்பம் இக்காலத்துப் பெண்களுக்கு ஓர் தற்காப்பாக மட்டுமன்றி ஒரு தனி அடையாளமாகவும் திகழும். அதனடிப்படையில் இவர்களின் திறமைக்கான அங்கீகாரத்திற்கு நடைபெற இருக்கும் போட்டியில் பங்குபற்ற மாணவி ஒருவருக்கு 5000 ரூபாய் தேவையாகையால் பங்குபற்றும் 18 மாணவிகளுக்கும் ஓர் மாணவிக்காக நீங்கள் வழங்கும் சிறு தொகை ( 5000 LKR ) நாளை ஓர் கலைப்புரட்சிக்கு வித்திடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.