நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எம்மால் அடையாளப்படுத்தப்படும் தேவைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து அவற்றிற்கு தீர்வு காண்பதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட திறன்களின் தொகுப்பே வாழ்க்கை திறன் ஆகும். எமது வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்வதில் வாழ்க்கைத்திறன் பாரிய பங்களிப்பைச் செலுத்துகின்றது, ஆகையால் வளர்ந்து வரும் ஒவ்வொரு இளம் சமுதாயத்தினரும் இப்பயிற்சியைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாத தொன்றாகும்.
அந்த வகையில் திருப்பழுகாமத்தில் தரம் 6 மற்றும் 7 இல் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்கால கற்றல் நடவடிக்கையில் ஆர்வத்தினை தூண்டும் வகையில் பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பினால் மாணவர்களிற்கு வாராந்தம் பயிற்சி செயலமர்வுகள் நடைபெறுகின்றது. இந்த வார செயலமர்வு எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர் குழுவினால் நடாத்தப்பட்டது.
மன ஒருமைப்பாடு, தன்னம்பிக்கை, கற்றலைப் புரிந்துகொள்ளுதல், ஒழுக்கம் போன்ற தொனிப்பொருட்களில் செயலமர்வு நடாத்தப்பட்டதோடு பல்வேறு விளையாட்டு செயற்பாடுகள் ஊடாக வாழ்க்கைத்திறன் பயிற்றுவிக்கப்பட்டது.
இதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கிய மாணவர்களுக்கும் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த திருப்பழுகாமம் பழைய மாணவர் அமைப்பினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.