விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் சிறுவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் பாரியளவில் முக்கியத்துவம் பெறுகின்றது. இன்றைய சிறுவர்கள் முறையான விதத்தில் பயிற்றுவிக்கப்படும் போது, கட்டியெழுப்பப்படும் திறமையான மாணவர் சமுதாயமானது நாளை சிறந்த தலைவர்களை உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அந்த வகையில் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இவ்வாண்டிற்குரிய முதலாவது கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. எமது 5 பாலர் பாடசாலைகளிலும் கற்பிக்கும் 10 ஆசிரியர்களும் கலந்துகொண்டதோடு
சென்ற ஆண்டிற்கான ஆவணங்களின் சமர்ப்பித்தலைத் தொடர்ந்து எதிர்வரும் காலப்பகுதிகளில் அவர்களுடனான எமது செயற்றிட்டங்கள் பற்றியும் அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது .
எமது பாலர் பாடசாலைகளுக்கான நன்கொடையாளர்களின் விபரம் வருமாறு :-
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கான உதவி வழங்கப்படுகின்ற பாலர் பாடசாலைகளாக,
• வந்தாறுமூலை/சக்தி பாலர் பாடசாலை – திரு.M.விசாகன், கனடா = 45 சிறுவர்கள்
• பலாச்சோலை/விபுலானந்தா பாலர் பாடசாலை – திரு.E.ஏகாம்பரம், கனடா = 45 சிறுவர்கள்
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் சத்துணவு வழங்கப்படும் பாடசாலைகளாக,
• திருநீற்றுக்கேணி/நலன்புரி பாலர் பாடசாலை – திருமதி.மனோகரி நல்லதம்பி குடும்பம் = 25 சிறுவர்கள்
• புலிபாஞ்சகல்/மாணிக்கப்பிள்ளையார் பாலர் பாடசாலை – திரு.V.சிவசுந்தரம், இலண்டன். 10 சிறுவர்கள்
• கிரான்/கௌரி பாலர் பாடசாலை – திரு.N.செந்தில்குமார், இலண்டன் = 14 சிறுவர்கள்
அதற்கிணங்க இவ்வாறான பாலர் பாடசாலைகளுக்காக எமக்கு கரம் கொடுக்கும் எமது புலம்பெயர் அறக்கட்டளை உறவுகளுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
தற்போது மாணிக்க பிள்ளையார் பாலர் பாடசாலைக்கு சத்துணவிற்கான உதவியாக மாதாந்தம் 20000 தேவைப்படுகின்றது. நீங்கள் முன்வந்து செய்யும் உதவியானது சிறுவர்களின் ஆரோக்கியமான கல்விக்குப் பெரிதும் உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்..















