சாதனையாளர்களின் சங்கமம்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் சமூக மாற்றத்திற்கான பல்வேறு மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் எம் உறவுகளால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் உதவித்தொகை பெறும் மாணவர்களில் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. எமது அறக்கட்டளை உறவுகளான திரு. லவன் சிவராஜா மற்றும் அவரது துணைவி திருமதி. ஸ்ரீநிதி சுப்பிரமணியம், ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அதிபர், பிரதேச செயலகத்தில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களுடன் பணிசெய்யும் உத்தியோகத்தர்கள் மற்றும் எமது அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்கள், கல்லூரி பயிலுனர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

சாதனையாளர்களும் அவர்களுக்கான அனுசரணை வழங்கும் எமது அறக்கட்டளை உறவுகளும் வருமாறு,

உர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைகழக அனுமதி பெற்ற மாணவர்கள்

  • கணபதிப்பிள்ளை சாலினி = திரு. ராஜேஷ் கணேசராசா, கனடா
  • தேவகுமார் யோவிதா = திரு. வரா சிவராஜா, இலண்டன்
  • விமலநாதன் டிலுக்ஜி = மனித நேய நம்பிக்கை நிதியம்

க.பொ.த.சாதாரண தரம் சித்தியடைந்த மாணவர்கள்

  • மகேஸ்வரன் றீர்த்தனா = திரு. இ. குணரெட்ணம், கனடா
  • சந்திரசேகரம் விஷ்வரூபினி = திரு. திருமதி. விஜி ஏகாம்பரம், கனடா

சுற்றாடல் முன்னோடிப் படையணி ஊடாக ஜனாதிபதி விருதிற்குத் தெரிவாகிய மாணவர்கள்

  • கணேசன் கஜேந்தினி = திரு. க. தவசெல்வன், அமெரிக்கா
  • யோகராசா பதுசனா = திரு. க. தவசெல்வன், அமெரிக்கா
  • ஹரிராஜ் கல்ப்பனா = திருமதி. கலா லோகநாயகம், பிரான்ஸ்

நாட்டியநாடகப் போட்டியில் கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் 3 ஆம் இடம்பெற்ற மாணவர்கள்

  • இராமபிரபா வதனரட்சா = திரு. க. தவசெல்வன், அமெரிக்கா
  • கணேசன் கஜேந்தினி = திரு. க. தவசெல்வன், அமெரிக்கா
  • மகாலிங்கம் சிவதுர்க்கா = திரு. திருமதி. சிவசேகரம் பிறேமளா, கனடா

மாதாந்த உதவித்தொகை மூலம் மரநடுகை மேற்கொண்டு இன்று எமக்கும் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட

  • வேலுப்பிள்ளை ஜதுஷன் = திரு. தம்பியையா அவர்களின் பேரப்பிள்ளைகள்

ஆகியோருக்கான நினைவுச்சின்னம் மற்றும் குறிப்பிட்ட வெகுமதி வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அவர்களது அனுபவங்களும் காணொளி வடிவில் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வசிக்கும் திரு. இ. ஏகாம்பரம் அவர்களால் 2020 இல் 5 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தில் மேலும் பல உறவுகளும் இணைந்து இதுவரை 106 மாணவர்களுக்கான உதவி கிடைத்திருந்தது. இவ்வாறான சாதனைகள் இத் திட்டத்தின் அறுவடையாகும். எமது மாணவர்களின் கல்விக்கும், ஏனைய முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பாக என்றும் கரம் கொடுக்கும் எமது புலம்பெயர் எமது அறக்கட்டளை உறவுகளே பின்னணியாக உள்ளனர். அவர்களுக்கு இந்த மாணவர்கள் மற்றும் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *