சேவையாளர்களின் அடுத்த கட்ட நகர்வு

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சேவையாளர்களுக்கான இரண்டாம் கட்ட வாழ்வியல் பயிற்சி பட்டறை ஆனது இரண்டு வார காலங்களாக இந்தியாவில் இடம் பெற்றது.

இப்பயிற்சியின் மூலமாக வாழ்வில் வழி தெரியாமல் தடுமாறும் இளைஞர் யுவதிகள், பாடசாலையினை விட்டு இடை விலகிய மற்றும் உயர்தரம், சாதாரண தர பரீட்சை போன்றவற்றில் சித்தி அடையாமல் பாதை மாறி செல்லும் மாணவர்கள் மற்றும் வீட்டில் முடங்கி இருக்கும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்காகவும் இளவயது திருமணத்தினை தடுத்து அவர்களுக்கான தொழிலுக்காக வழி காட்டுதல் மற்றும் அவர்களின் மனப்பாங்கினை மாற்றி அமைப்பதற்கான மென் திறன் பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி நெறியானது வழங்கப்பட்டதுடன் சமுதாய கல்லூரி பற்றிய அறிவும் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியினை வழங்கிய இந்திய சமுதாயக் கல்லூரிகள் ஆராய்ச்சி வளர்ச்சி மையமம், இவை அனைத்திற்கும் நிதியுதவி வழங்கிடும் யுனைடெட் போர்டு ஃபார் கிறிஸ்டியன் ஹையர் எஜுகேஷன் இன் ஆசியா நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்..

இப்ப பயிற்சியை பெற்றதன் மூலம் எமது சேவையாளர்கள் வடகிழக்கு மாகாணங்களில் முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலே 500 மாணவர்களுக்கு இலவச பயிற்சியளித்து வழிகாட்டல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல உதவிகள் வழங்க எமது அறக்கட்டளை உறவுகள் முன் வந்திருக்கின்றன குறிப்பாக இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் மற்றும் மனித நேய நம்பிக்கை நிதியம் போன்ற அமைப்புகள் எமக்கான உதவி வழங்க முன் வந்திருக்கின்றன அத்தோடு மேலதிகமான உதவிகளை எமது அறக்கட்டளை உறவுகள் வழங்கும் என்ற நம்பிக்கையில் இச் செயற்பாட்டினை முன்னெடுக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *