வாழ்வியலும் வழிகாட்டலும்

அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்காகக் கையாளப்படும் வாழ்வோடு இணைந்த முறையே வாழ்க்கை திறனாகும். முறையானதோர் இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் வாழ்க்கைத்திறன் பாரியளவிலான தாக்கம் செலுத்துவது இன்றியமையாததொன்றாகும்

அந்த வகையில் முல்லைத்தீவு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களுக்கான வாழ்வியலும் வழிகாட்டலும் எமது பயிற்சி உத்தியோகத்தர் திரு.ஜெயம் ஜெகன் அவர்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதோடு பிரச்சினைகளைத் தீர்த்தல் தொடர்பான வழிகாட்டல் பயிற்சி செயற்பாடுகளூடாக மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.

இவ்வாறான வாழ்வியல் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதன் மூலம் எமது சமுதாயத்தில் பாரியளவு மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *