வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் பின் தங்கிய கிராமப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த உதவித்தொகையொன்றினை வழங்குவதன் மூலம் அவர்களது கல்விக்கான எமது பங்களிப்பை வழங்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் திரு.சுப்பிரமணியம் ராஜு கபீரியல் அவர்கள் இதனை செவ்வனே நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நமது புலம்பெயர் உறவுகள் எமது மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான உதவித்தொகையை வழங்குவதன் மூலம் அவர்களது கல்விக்கான மேம்பாட்டிற்கும் பங்களிப்பு வழங்கும் எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுக்கு எமது சமுதாய அறக்கட்டளையின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவ்வாறே இன்று மாணவர்களுக்கு நீங்கள் முன்வந்து வழங்கும் சிறு பங்களிப்புத்தொகையானது (USD 15) நாளை ஒரு எதிர்காலத் தலைவரை உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தொடர்புக்கு : http://wa.me/+94776770780
நன்கொடைகள் வழங்கிட