பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இவ்வாண்டிற்குரிய இரண்டாவது கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. எமது 5 பாலர் பாடசாலைகளிலும் கற்பிக்கும் 7 ஆசிரியர்களும் கலந்துகொண்டதோடு, சென்ற கலந்துரையாடலுக்கான கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் காலப்பகுதிகளில் அவர்களுடனான எமது செயற்றிட்டங்கள் பற்றி தெளிவூட்டப்பட்டது. அத்தோடு அவர்களின் வேண்டுகோளாக அவர்களிற்கு ஆங்கிலம் மற்றும் கணினி அத்தோடு மூன்றாம் மொழி சிங்களம் போன்றவற்றில் தங்களுக்கான அடிப்படை அறிவினை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டனர். அத்தோடு அவர்கள் பாடசாலையில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய பல விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.
எமது பாலர் பாடசாலைகளும் அதற்கான நன்கொடையாளர்களின் விபரமும் :
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கான உதவி வழங்கப்படுகின்ற பாலர் பாடசாலைகளாக,
- வந்தாறுமூலை/சக்தி பாலர் பாடசாலை – திரு.மு.விசாகன், கனடா = 45 சிறுவர்கள்
- பலாச்சோலை/விபுலானந்தா பாலர் பாடசாலை – திரு.இ.ஏகாம்பரம், கனடா = 45 சிறுவர்கள்
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் சத்துணவு வழங்கப்படும் பாடசாலைகளாக,
- திருநீற்றுக்கேணி/நலன்புரி பாலர் பாடசாலை – திருமதி.மனோகரி நல்லதம்பி குடும்பம், அமெரிக்கா = 25 சிறுவர்கள்
- புலிபாஞ்சகல்/மாணிக்கப்பிள்ளையார் பாலர் பாடசாலை – திரு.V.சிவசுந்தரம், இலண்டன் – 10 சிறுவர்கள்
- கிரான்/கௌரி பாலர் பாடசாலை – திரு.N.செந்தில்குமார், இலண்டன் – 14 சிறுவர்கள்
இவ்வாறான பாலர் பாடசாலைகளுக்காக எமக்கு கரம் கொடுக்கும் எமது புலம்பெயர் அறக்கட்டளை உறவுகளுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புக்கு : http://wa.me/+94776770780
நன்கொடைகள் வழங்கிட