இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் தான் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சவால்களையும் தாண்டி அவற்றை மன தைரியத்துடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான மென் திறன் பயிற்சியே வாழ்வியலாகும்.
அந்த வகையில் இன்றைய தினம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கிராமங்களில் இளைஞர்கள், மாணவர்களுக்காக பணிபுரியும் சேவையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைத் திறன் பயிற்சி பெற்ற அணியினரால் சிறப்பான முறையில் வாழ்வியலும் வழிகாட்டலும் பயிற்சியானது மேற்கொள்ளப்பட்டது. குழுவாக வேலை செய்தல் பிரச்சினைகளை தீர்த்தல் எனும் தலைப்பில் பல்வேறு சிறப்பான செயற்பாடுகளூடாக எமது குழுவினரால் அவர்களுக்கான பயிற்சி செயலமர்வானது முன்னெடுக்கப்பட்டிருந்தமை மிகவும் சிறப்பானதாகும்.
பொருத்தமான முறையில் வாழ்வியல் பயிற்சியானது வழங்கப்படும் பட்சத்தில் கிராமங்கள் தோறும் பாரியதொரு மாற்றத்தினை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்த முடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இவ்வாறு மாதம் ஒரு பயிற்சிப் பட்டறைக்கான Tool Kits, Stationary and Refreshments போன்றவற்றிற்கு LKR 15,000 ($ 50) தேவையாக உள்ளது. எம்முடன் இணைந்து உங்கள் பங்களிற்பிற்கு தொடர்பு கொள்ளவும்.