இன்றைய சிறுவர்களைப் பொருத்தமான முறையில் ஆற்றுகைப்படுத்துவதன் மூலம் நாளைய தலைவர்களை சிறப்பான முறையில் உருவாக்க முடியும் எனும் நோக்கில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக எமது சமுதாயத்தின் இளைஞர்கள், பெண்கள், பின் தங்கிய கிராமப் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு, கிராமங்களுக்கு சென்று மற்றும் எமது திட்ட பிரதேசங்களுக்கு சென்று வாழ்வியல் பயிற்சியானது வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் எமது திட்டப்பிரதேசமான புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜீவானந்தா மகளிர் இல்லத்தில் வசிக்கும் மாணவிகளுக்கான வாழ்வியல் பயிற்சியானது இன்றைய தினம் இடம்பெற்றது.
குழு ஒற்றுமை தொடர்பான தொனிப்பொருளில் பல்வேறு உற்சாகமூட்டும் செயற்பாடுகளூடாக மாணவிகளுக்கான தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சேவையாளர்கள் இப்பயிற்சியினை மேற்கொண்டமை சிறப்பானதொரு விடயமாகும்.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் சிறுவர்களை வளப்படுத்தி நாளைய சமுதாயத்தைத் திறம்பட கட்டியெழுப்புவதே எமது அறக்கட்டளையின் நோக்கமாகும்.