பாடசாலைக் கல்வியின் பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் பின்தங்கிய கிராமங்களில் தேக்கமடையும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் தூரநோக்குடன் அவர்களின் வாழ்க்கையினை திட்டமிடவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக காணப்படும் சில குறிப்பிட்ட திறன்களை அடையாளப்படுத்தி அவற்றினை நிபர்த்தி செய்திடும் ஒரு செயற்பாடாகும்.
AU Lanka & Child Fund நிதி அனுசரணையில் எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த சமூதாய அறக்கட்டளையும் இணைந்து வவுணதீவு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம இளைஞர்களின் ஆங்கில மொழி விருத்திக்காக பல கிராமங்களை மையப்படுத்தி 4 இடங்களில் தற்காலிக பயிற்சி நிலையங்களில் ஊடாக 160 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு வழங்கிய பயிற்சிகள் யாவும் சிறப்பாக நிறைவடைந்து, 153 மாணவர்களிற்கு வெற்றிகரமாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில், பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் மற்றும் AU Lanka நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி திரு.க.கஜன் அத்தோடு அரச உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அதிகாரிகள், கல்லூரி சேவையாளர்கள், நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு பயிற்சியில் அவர்களிற்கான மேலதிக திறன் விருத்தி போட்டி நடாத்தப்பட்டு அதில் பங்குபற்றிய வெற்றியீட்டியவர்களிற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.