” நீ செய்த தவறுகளை வாழ்த்து; அவைகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டுகின்றது.” என்னும் சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்கிணங்க வலிகளும் ஆயிரம் தடைகளும் கடந்து அனுபவங்கள் மூலம் பாடங்கள் பலகற்று, படிப்படியாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை நிறுவனமானது 2019.04.17 ஆம் திகதி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட தனது ஐந்தாவது ஆண்டு நிறைவினை இனிதே கடக்கின்றது.
எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் எமது திட்ட முகாமையாளர் திரு.சு.ராஜு கபீரியல் அவர்களின் முகாமைத்துவத்தில் சமூக சிந்தனையுள்ள துடிப்புமிக்க இளைஞர்கள் சேவையாளர்களாக இணைந்து மிகவும் திறம்பட செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது அறக்கட்டளையின் அகவை தினமானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள், விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, மற்றும் அமிர்தா நிறுவனம் உள்ளிட்ட விவேகானந்த குடும்பத்தின் அனைத்து சேவையாளர்களும் இணைந்து மிகவும் எளிமையான முறையில் 17.04.2024 நினைவு கூரப்பட்டது.
இந் நினைவு தினத்தில் கடந்து வந்த பாதைகள் மீட்டுப்பார்க்கப்பட்டது. அனைத்திற்கும் ஆதாரமாய் செயற்பாடுகளிற்கு உதவி வழங்கிடும் எமது புலம்பெயர் உறவுகளையும் நினைவு கூர்ந்தோம். இந்த வருடத்தில் மூன்றாம் காலாண்டு பகுதியில் எமது 5 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட இருக்கின்றது. இது சம்பந்தமான விபரங்களை
சுவாமி விவேகானந்தரின் பூஜைகளைத் தொடர்ந்து எமது அறக்கட்டளையின் ஆரம்பம் பற்றிய பணிப்பாளரின் பதிவுகளைத் தொடர்ந்து எமது திட்டங்கள் மற்றும் சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலில் எமது பங்களிப்பு தொடர்பான முகாமையாளரின் சிறப்புரையும் இடம்பெற்றதோடு இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மாற்றத்திற்கான அவசியம் தொடர்பில் எமது கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் அனுபவப்பகிர்வுகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
நிறைவு விழாவின் இறுதி நிகழ்வாக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஐந்து ஆண்டு பயணத்தின் நினைவாகப் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டமை சிறப்பானதாகும்.
ஐந்தாண்டு கடந்து தொடரும் எம் பயணமானது, மாற்றத்திற்கான வலுவூட்டலினூடாகப் புதியதோர் சமுதாயத்தைக் கட்டியெழுப்பி ஒவ்வோர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வாழும் என்பதில் ஐயமில்லை ..
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் பணியானது மாதங்கள் தோறும் விழுதுகளாய் தொடரும் !!