விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்காகவும் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பினைத் தவறவிட்டவர்களுக்காகவும் விசேடமான பயிற்சிகளாக வாழ்வியலும் வழிகாட்டலும், அடிப்படைக் கணினி மற்றும் அலுவலக முகாமைத்துவம் போன்ற பயிற்சிகளை உருவாக்கி காலத்தின் தேவைக்கேற்ற வகையில் அதனை பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



அதனடிப்படையில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின், புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகள் உள்ளடங்கலாக Office management & IT மற்றும் CCTV Installation & PABX Technician பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்த 60 பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்றது.
எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் உறவான மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையில் எமது அறக்கட்டளையினூடாக விவேகானந்த தொழிநுட்பக் கல்லூரியால் இப் பயிற்சிநெறி முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திருமதி.அபிராமி கயிலாசபிள்ளை மற்றும் பொருளாளர் திரு.கயிலாசபிள்ளை அரவிந்தன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததோடு அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



பாடசாலைக்கல்வியைப் பூர்த்தி செய்த நிலையில் தொழிற்தகைமைகளுக்காக அடிப்படைக் கணினி அறிவினைப் பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் Office management & IT பாடநெறி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என பின்னூட்டல்களும் கிடைக்கப்பெற்று அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அத்துடன் திருமணமான நிலையில் கல்வியை தொடர முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட போதிலும் Office management IT பாடநெறியைப் பயிலும் வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக தற்போது அக்கணினி அறிவினை மேம்படுத்தும் வண்ணம் NVQ L4 பயிற்சிநெறியைத் தொடர்வதாக மாணவி ஒருவர் தமது அனுபவப்பகிர்வில் குறிப்பிட்டமை எடுத்தியம்பத்தக்கது.



இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது அனுசரணையை வழங்கிய மனித நேய நம்பிக்கை நிதியத்தினருக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Today’s small stages are the ways for Tomorrow’s Big success..
Vivekananda College of Technology has been conducting special training programs in various locations to meet current needs. These programs include life skills, career guidance, basic computer training, and office management, designed for students who did not pass the G.C.E. Advanced Level examination and those who missed university opportunities despite passing.



As part of this, the Certificate awarding ceremony for 60 trainees who completed the Office Management & IT and CCTV Installation & PABX Technician courses at the Puthukudiyiruppu and Kommathurai branches was held at Vivekananda College of Technology, Puthukudiyiruppu.
This training program was conducted through our Vivekananda Community Foundation foundation with the financial support from our Donner, Manitha Neyam Trust.



The event was led by our Executive Director, Mr. K. Pratheeswaran, with Mrs. Abirami Kailasapillai, Chairperson of Manitha Neyam Trust, and Mr. Kailasapillai Aravindan, Treasurer, attending as chief guests. They awarded certificates to the students and also the guests were honored with shawls and mementos in appreciation of their selfless service.
Students shared their experiences, highlighting that the Office Management & IT course was very useful in helping them gain basic computer skills needed for employment. One student, despite being unable to continue her education due to marriage, shared that this course gave her the opportunity to improve her computer skills, and she is now continuing her learning through the NVQ Level 4 program.



On behalf of Vivekananda Community Foundation, we express our sincere gratitude to Manitha Neyam Trust for their support in making this program possible
For further information,
Administration,
Vivekananda Community Foundation