காரைதீவிலும் கணினி கற்கை கூடம் ஆரம்பம் …

vcot

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினூடாக நாம் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில், பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழான எல்லைப் பிரதேசங்களை மையப்படுத்தி சமுதாயக் கல்லூரிகளை நாம் உருவாக்கி வருகின்றோம்.

அதனடிப்படையில் இவ்வாறான பிரதேசங்களில் கணினி கூடங்களை மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி செயற்படுத்தி வருகின்றது. அதன் பிரகாரம் முல்லைதீவு புதுக்குடியிருப்பில் VCOT Community College ஒன்றையும், திருகோணமலை வெருகல்முகத்துவாரம் பாடசாலை ஒன்றில் ஒரு கணினி கற்றல் கூடத்தினையும் (VCOT Computer Learning Unit), மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துடன் இணைந்து கரடியனாறு பாடசாலையில் (Manitha Neyam Community College) ஒன்றினையும், உருவாக்கி சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில், மற்றுமொரு கணினி கற்றல் கூடமானது உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களின் துணைத்தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஶ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்களின் காரைதீவு விஜயத்துடனும் 8 இற்கும் மேற்பட்ட இராமகிருஷ்ண மிஷன் துறவிகளின் ஆசீர்வாதத்துடன் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு இராமகிருஸ்ண மிஷன் மனித மேம்பாட்டு பயிற்சிநிலையத்துடன் இணைந்த கணினி கற்றல் கூடம் மிகவும் சிறப்பாக (VCOT Computer Learning Unit) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இச் செயற்பாட்டிற்கான நிதியுதவியினை வழங்கிக்கொண்டிருக்கும் மனித நேய நிதியத்தின் தலைவர் திருமதி.அபிராமி கயிலாசபிள்ளை மற்றும் பொருளாளர் திரு.கயிலாசபிள்ளை அரவிந்தன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான செயற்பாடுகளை தேவைப்பாடுடைய பிரதேசங்களுக்குச் சென்று வழங்குவதன் மூலம் இளைஞர்கள், யுவதிகளை அடையாளப்படுத்துவதோடு மட்டுமன்றி அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த வழிகாட்டலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

இச்செயற்பாட்டிற்காக எம்முடன் இணைந்து பயணிக்கும் மனித நேய நிதியத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.

Empowering Youth Through Community Colleges

Through Vivekananda College of Technology, we are implementing various initiatives to empower youth. As a part of this, we are establishing community colleges in marginalized and poverty-stricken border regions & Villages.

With the support of Manitha Neyam Trust, Vivekananda Community Foundation operates Vivekananda College of Technology’s computer learning centers in these regions. Accordingly, a VCOT Community College has been established in Puthukudiyiruppu, Mullaitivu, a VCOT Computer Learning Unit at Verugal Mughathuvaaram Thuvaraga Vithyalayam School in Trincomalee, and a Manitha Neyam Community College at Karadiyanaru School in collaboration with the Batticaloa West Education Zone.

During the visit of Revered Srimat Swami Suhitananda Ji Maharaj, Vice President of the Global Ramakrishna Mission, a VCOT Computer Learning Unit was inaugurated in Karaitheevu, partnership with the Karaitheevu Ramakrishna Mission Human Development Training Center in Ampara district. Mrs. Abirami Kailasapillai, Chairperson of Manitha Neyam Trust, and Mr. Kailasapillai Aravindhan, Treasurer, graced the event.

By bringing these initiatives to underserved areas, we empower youth and provide them with guidance for a better future.
We express our gratitude to Manitha Neyam Trust for their support in this initiative.

For more details https://vcf.lk/needs/