எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பின்தங்கிய கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான பல்வேறு செயற்பாடுகளின் மூலம் மாற்றத்திற்கான வலவூட்டலினை மேற்கொண்டு வருகின்றது.



அந்த வகையில், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களை மையப்படுத்தியதாக அவர்களுக்கான வழிகாட்டலை வழங்கும் வண்ணம் விசேட கருத்தரங்கு ஒன்று UK இல் பிரபல்யமான கல்லூரிகளான Writtle College , IOM International Business School போன்றவற்றில் தலைமை விரிவுரையாளராகவும் முதுமானி கற்கைகளிற்கான சிறப்பான விரிவுரையாளராக 20 வருட அனுவத்துடன் Optima Foundation-UK இன் பணிப்பாளராக இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சமூகப்பணியாளராக தாழ்ந்துபோன சமூகத்தினை கட்டியெழுப்பும் சேவையினை ஆற்றியதுடன் பல நாடுகள், நிறுவனங்களுக்கு ஒரு திட்டமிடல் ஆலோசகராக பணிசெய்த ஒரு அனுபவம் மற்றும் கல்விப்புலமை உடைய இலண்டனில் வசிக்கும் கலாநிதி.தோமஸ் ஜெயந்திரன் அவர்களின் நெறியாள்கையில் எமது அமிர்தா நிறுவனத்தில் இடம்பெற்றது.
சுயதொழில் மற்றும் வியாபாரம் ஒன்றினை ஆரம்பித்தல் தொடர்பான மேலதிக விளக்கங்களை அடுத்து புத்தாக்க சிந்தனைகளை எவ்வாறு செயல் வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்துவது, அதற்கான செயன்முறைகள், சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்றவை பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டதோடு SWOT, PESTEL போன்ற பகுப்பாய்வு முறைகளின் மூலமான சாத்தியக்கூற்று ஆய்வுகள் மற்றும் குழு செயற்பாடுகள் மூலமான தெளிவூட்டல்களும் மேற்கொள்ளப்பட்டமை மிகவும் சிறப்பானதாகும்.



இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதன் மூலம் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தொழிற்பாதைக்கான வழிகாட்டலாகவும் இது அமையும்.
திரு.தோமஸ் ஜெயந்திரன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
A Path for Career Guidance
The Vivekananda Community Foundation continues to support social transformation by empowering underprivileged rural families, female-headed households, and students through various initiatives.
As part of this effort, a special seminar was conducted at Amirda, focusing on career guidance for youth and entrepreneurs. The session was led by Dr. Thomas Jeyandiran, a London-based academic with 20 years of experience. He has worked as a senior lecturer at well-known UK colleges such as Writtle College and IOM International Business School. He is also the Director of Optima Foundation-UK and has contributed to social development in Sri Lanka and other countries. Additionally, he has served as a strategic consultant for various organizations.



The seminar explained how to start a business or self-employment. It covered how to develop and apply new ideas, the steps to follow, challenges, and solutions. Participants also learned to analyze opportunities using methods like SWOT and PESTEL. Group activities helped them understand these concepts better, making the session very useful.
Through this program, Entrepreneurs can be identified ang guided towards a clear career path.
We sincerely thank Dr. Thomas Jeyandiran on behalf of the Vivekananda Community Foundation.
For further details,
Administration,
Vivekananda Community Foundation.


