இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பு ..!

Environmental Activities

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக சமூகம் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் பசுமைப் புரட்சித் திட்டம் எனும் தொனிப்பொருளில் சுற்றாடலை மையப்படுத்தியதாக பல்வேறு செயற்றிட்டங்களை எமது சுற்றாடல் மேம்பாட்டுப் படையணியினூடாக முன்னெடுத்து வருகின்றோம்.

அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தின் 3ம் குறிச்சி கடற்கரைப் பிரதேசத்தில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணைப்பாளர் திருமதி.ரஜனி பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சுற்றாடல் மேம்பாட்டுப் படையணியின் உறுப்பினர்கள், விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள் உள்ளிட்ட கல்லூரியின் பயிலுனர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே, சூழலுக்கு நன்மை பயக்க கூடிய மரங்களை நடுகை செய்தல், வேப்பம் விதைகள், 1000 பனை விதைகளை நடுதல் என பல்வேறு திட்டங்களை நாம் செயற்படுத்தவிருக்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளுக்காக எங்களுடன் நீங்களும் இணைந்து கொள்வதன் மூலம் சூழலுக்கான பங்களிப்பை வழங்க முடியும்

மேலதிக தகவல்களுக்கு,

நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை

Environmental Activities for a Green Revolution of our Mother Nature

Through the Vivekananda Community Foundation, we carry out various community-based activities for social transformation.
As part of this, under the theme “Green World Program,” we are implementing several environmental projects through our Environmental Development Team. Based on this, a Shramadana (voluntary service) event was held at the 3rd Kurichchi coastal area in Kaluthavalai, within the Manmunai South Eruvilpattu Divisional Secretariat.

The event was led by Mrs. Rajani Bhaskaran, Coordinator of the Central Environmental Authority, with the participation of members of the Environmental Development Team, Vivekananda Community Foundation, Vivekananda College of Technology, and its trainees.

Additionally, we are implementing various projects such as planting environment-friendly trees, sowing neem seeds, and planting 1,000 palmyra seeds. You can also join us in these activities and contribute to the environment.

For Further details

Administration,
Vivekananda Community Foundation