“கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களிற்கான மாதாந்த உதவித்திட்டம், அடிப்படைக் கணிணி வகுப்புகள், அறநெறிக்கான கல்வி உபகரணங்கள், வாழ்வியல் பயிற்சி செயலமர்வுகள், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் என எமது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில், எமது நீண்டநாள் நன்கொடையாளராகிய திரு.கோபாலு பகீரதன் அவர்களின் தாயாராகிய திருமதி.அன்னபாக்கியம் கோபாலு அவர்களின் 4ம் ஆண்டு நினைவுதினத்தினையொட்டி மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தினரின் வேண்டுகோளுக்கமைவாக அவர்களின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது திட்டமுகாமையாளருட்பட சேவையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது அனுசரணையை வழங்கிய திரு.கோபாலு பகீரதன் அவர்களுக்கு எமது அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன்றைய இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு கல்வி மாத்திரமன்றி உடல் ரீதியான செயற்பாடுகளும் விளையாட்டுக்களும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் எம்முடன் இணைந்து நினைவு நாட்களையும் பயனுள்ளதாக மாற்றியமைக்க முடியும்.
மேலதிக தகவல்களுக்கு,
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
Trophies for School children in honor of memory
Under the theme of “Village Empowerment for Transformation,” our Vivekananda Community Foundation is carrying out various initiatives for people in Mavilanguthurai, such as monthly assistance programs for those pursuing higher education, basic computer classes ( IT awareness program), Educational materials, life skills training activities, Leadership Programs, Awards for students who have completed basic and higher-level education.
In this regard, on the 4th remembrance of the passing of Mrs. Annapakiyam Gopalu, mother of our long-time donor Mr. Gopalu Pakirathan, in response to the request from the Vigneswara Vidyalaya in Mavilanguthurai, we provided trophies for their annual sports competition. Our project manager and staffs were also participated in this event.


We sincerely thank Mr. Gopalu Pakirathan for his continuous support through our foundation.
It is important to note that physical activities and sports, in addition to education, play a significant role in the progress of today’s youth.
Through such activities, we can transform your remembrance days into something meaningful.
For further information,
Administration,
Vivekananda Community Foundation.

