மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப் பொருளின் கீழ், விவேகானந்த சமுதாய அறக்கட்டளை முன்னெடுத்து செயற்படுத்தும் மாணவர்களைப் பொறுப்பெடுக்கும் திட்டமானது கடந்த 5 ஆண்டுகளாக 150 மாணவர்களை உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இத்திட்டத்தின் வழியாக, மேலும் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நோக்குடன், எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதன் மூலம் அவர்களது கல்வியில் இடைநிறுத்தம் ஏற்படாமல் தடுப்பதே எமது முக்கிய நோக்கமாகும்.

அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் திரு.வாமதேவன் அமர்நீதி அவர்கள், எமது திட்டத்தினூடாக மேலும் இரண்டு மாணவர்களை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு அம்மாணவர்களுக்கான முதற்கட்ட மாதாந்த உதவி தொகை வழங்கப்பட்டதோடு இச்செயற்பாட்டில், எமது திட்ட முகாமையாளருள்ளிட்ட, கள சேவையாளர்களும் பங்கேற்றமை சிறப்பானதாகும்.
இச் செயற்பாடுகள் மூலம் வறுமையைக் குறைக்க முடியாதெனினும், வறுமைக்கோட்டிற்குள் வாழும் மாணவர்களின் கல்வி இடைநிறுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அவர்களது எதிர்கால முன்னேற்றத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையில் அமையும் என்பதில் மாற்றமில்லை.

இவ்வாறான செயற்பாட்டின் மூலம் மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நீங்களும் எம்முடன் இணைந்து கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு,
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை.
Turning Barriers into Stepping Stones !
Under the theme “Student Empowerment for Transformation”, the student sponsorship program implemented by the Vivekananda Community Foundation has supported 150 students over the past 5 years.
Through this program, with the aim of including more students, we work together with our diaspora supporters to select students and provide them with a monthly encouragement allowance to prevent interruptions in their education.
In this regard, Mr. Vamadevan Amarneethi, residing in the USA, has newly taken responsibility for sponsoring two more students through our program.
Field visits were carried out, and the first payment of the monthly support allowance was provided. Our program manager and field staff also participated in this initiative.
Though this action may not eliminate poverty, it certainly helps reduce interruptions in the education of students living below the poverty line and contributes to their future progress.
Join us in making a difference in a student’s life through this initiative.
For more information,
Administration,
Vivekananda Community Foundation.