எமது சமூகத்தின் மேம்பாட்டிற்காக கல்வியை மட்டுமல்லாது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் தேவைப்பாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கான வலுவூட்டலை வழங்குவதே எமது நோக்கமாகும்.
அதனடிப்படையில் எமது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டற் செயற்பாட்டினூடாகத் தெரிவு செய்யப்பட்டு எமது அறக்கட்டளையினூடாகப் பொறுப்பெடுக்கப்பட்ட மாணவி ஒருவரின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி எமது நன்கொடையாளரான திரு. ரகுபதி நடராஜா அவர்களினால் எமது அறக்கட்டளையினூடாக வழங்கிவைக்கப்பட்டது.



அவர்கள் வாழ்வாதாரமாகப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதையடுத்து அதன் மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு பயிர்ச்செய்கைக்கான நீர் வசதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு வாழ்வாதார ஊக்குவிப்புத்தொகை வழங்கப்பட்டதோடு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அம்மாணவியின் தந்தைக்கு நாளாந்த வாழ்வில் முகம் கொடுக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கிய திரு. ரகுபதி நடராஜா அவர்களுக்கு எங்கள் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதோடு வாழ்வாதார முன்னேற்றம் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கைத்தரத்தினையும் முன்னேற்றுவதாக அமையும்
Livelihood Support for a strongest Future
Our aim is not only to promote education for community development but also to identify and address the needs of families living below the poverty line to empower them. Based on this, through our empowerment program for student transformation, a selected student’s family received livelihood support through our foundation, with the sponsorship of our donor, Mr. Raghupathi Nadaraja.
As the family depends on farming for their livelihood, support was provided to improve water access for cultivation. In addition, essential equipments were given to the student’s father, who is battling cancer, to help manage daily challenges.



We sincerely thank Mr. Raghupathi Nadaraja for his financial support through our foundation to carry out this initiative.
Such actions not only encourage self-employment but also improve both livelihood and the quality of life for the families involved.
For further information,
Administration,
Vivekananda Community Foundation,
https://wa.me/+94777105569