இன்றைய மேடைகள் ; நாளைய களங்களுக்கான அடித்தளங்கள்….

Encouraging Future Karate Champions

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 2020 இல் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள், கராத்தே, யோகா பயிற்சி என இன்று 60 மாணவிகளுக்கான தமது செயற்பாட்டை சாரதா நிலையம் முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் இலங்கை கராத்தே சம்மேளனத்தின் 50 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சங்கத்தினரால் நடாத்தப்பட்ட கராத்தே பயிற்சியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட கராத்தே பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட அன்னை ஸ்ரீ சாரதா நிலைய முகாமையாளர், உத்தியோகத்தர்கள், கராத்தே பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றார்களும் கலந்து கொண்டமை சிறப்பானதாகும்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 300 கராத்தே பயிற்சியாளர்கள் கலந்து கொண்டதுடன் இதில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தை சேர்ந்த 42 பெண் பயிற்சியாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு மாணவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டதுடன் பயிற்சியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை சிறப்பானதாகும்.

கல்வியோடு மட்டும் நின்றுவிடாது காலத்தின் தேவைக்கேற்ற வண்ணம் தற்காப்புக்கலைகளையும் கற்றுத் தடம் பதிக்க காத்திருக்கும் எமது அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை பெருமிதம் கொள்கின்றது.

Encouraging Future Karate Champions

The Annai Sri Saratha Centre, located in Puthukudiyiruppu, Mullaitivu, was established in 2020 by the Vivekananda Community Foundation to uplift and empower students through education and skill development.

With continued support from diaspora communities, the centre provides essential services for 60 girls, including nutritious day meals, clothing, special academic support, karate, and yoga training.

In that way 42 students from the Annai Sri Saratha Centre participated in a major district-level karate event hosted by the Mullaitivu District Karate Association, held at Puthukudiyiruppu Central College Grounds. This event was celebrated according to the 50th anniversary of the Sri Lanka Karate Federation and welcomed over 300 karate trainees from across the district. The girls proudly showcased their skills, received certificates of participation, and were honored alongside their trainers and families.

The Vivekananda Community Foundation is proud of these young champions, who are not only excelling in academics but also embracing self-defence and life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *