இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயமானது, விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களில் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. அதன் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஆலயத்தின் பொருளாளர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.


எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் கல்வி சார்ந்த செயற்பாடுகள் குறித்த விளக்கங்கள் சாரதா நிலைய முகாமையாளரால் வழங்கப்பட்டதோடு நிலையத்தின் செயற்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு மாணவர்களுடனான நேரடியாக கலந்துரையாடலும் இடம்பெற்றது.
அதேவேளை, அன்னை ஸ்ரீ சாரதா நிலைய வளாகத்தில் நிரந்தர கட்டிடமாக நிர்மாணிக்கப்படவுள்ள கற்றல் மேம்பாட்டு நிலையம், மற்றும் அதன் எதிர்கால முன்னேற்ற திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இத்தகைய செயற்பாடுகளுக்காக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாகத் தமது பங்களிப்பை வழங்கி வருகின்ற இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு, எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்
Stones and Words – A Foundation of Knowledge for Education..
London Sri Kanaka Thurkkai Amman Temple has been actively contributing to various initiatives aimed at social progress in collaboration with Vivekananda Community Foundation. As part of these efforts, the temple’s treasurer, Mr. Balasubramaniam, paid a noteworthy visit to the Annai Sri Saratha Centre, located in the resettled area of Puthukudiruppu in Mullaitivu district.
Annai Sri Sarada Center Established in 2019 by our Vivekananda Community Foundation, has been actively engaged in educational and social service initiatives since its inception. During the visit, the Centre’s manager provided detailed explanations about these activities, and Mr.Balasubramaniam personally observed the ongoing operations and engaged in direct discussions with the students.


Furthermore, in-depth discussions were held regarding the construction of a permanent Learning Enhancement Centre within the Annai Sri Saratha premises, as well as the future development plans related to it.
We, the Vivekananda Community Foundation, extend our heartfelt gratitude to the London Sri Kanaka Thurkkai Amman Temple for their continued support and valuable contributions to these meaningful initiatives.