எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் பின்தங்கிய மாணவர் சமுதாயத்தை மையப்படுத்தி நடைமுறைத்தப்படும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் மாணவிகள் கல்வியோடு மாத்திரம் நின்றுவிடாது , யோகா, கராத்தே என இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தம்மை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தும் யோகாப் போட்டியானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து 926 மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் எமது நிலையத்தை சேர்ந்த மாணவர்களும் வயது அடிப்படையில் கலந்துகொண்டமை சிறப்பானதாகும்.



அந்தவகையில் யோகா போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சாரதா நிலைய மாணவர்களின் விபரம் வருமாறு =
- 13 வயதுப்பிரிவில்
ர.மதிநிலா – 1ம் இடம் - 14 வயதுப்பிரிவில்
ஜெ.தர்மிதா -1ம் இடம்
த.ஸர்மி -2ம் இடம் - 15 வயதுப் பிரிவில்
அ. கதுஷா – 1ம் இடம்
கு. கஜீபா – 2ம் இடம் - 16 வயதுப் பிரிவில்
ர. ரம்மியா – 1ம் இடம்
பி.கஸ்தூரி – 2ம் இடம் - 17 வயதுப் பிரிவில்
இ.சுவேதா – 1ம் இடம்
க.சாம்பவி – 2ம் இடம்
ம.துவாரகா – 3ம் இடம் - 19 வயதுப் பிரிவில்
சி.கனிமொழி -1ம் இடம்
இம்மாணவர்களுக்கு எமது அறக்கட்டளை சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு இவ்வாறான பயிற்சிகள் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதாக மாத்திரமின்றி அவர்களின் உள்ளார்ந்த ஆளுமையையும் உடல் நலத்தையும் மேம்படுத்த வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
A Platform for Inner Excellence..
Through the Vivekananda Community Foundation, our Annai Sri Saradha Centre is being implemented in the Puthukudiruppu region of Mullaitivu District, focusing on the upliftment of underprivileged student communities. The students at our center are not only progressing in their academics but are also actively participating in co-curricular activities such as yoga and karate.
In line with this, on the occasion of International Yoga Day, a yoga competition was organized in collaboration with the Mullaitivu District Secretariat and the Department of Hindu Religious and Cultural Affairs’ Institute of Hindu Cultural Studies. The event was held at the Puthukudiyiruppu Divisional Secretariat, with the participation of 926 students. It is noteworthy that our center’s students participated in the competition across different age categories.



The details of the Saradha Centre students who excelled in the yoga competition are as follows:
• 13-year category
- R. Mathinila – 1st Place
• 14-year category
- J. Dharmitha – 1st Place
- T. Sarmi – 2nd Place
• 15-year category
- A. Kathusha – 1st Place
- Ku. Kajeepa – 2nd Place
• 16-year category
- R. Rammiya – 1st Place
- P. Kasthuri – 2nd Place
• 17-year category
- I. Swetha – 1st Place
- K. Sambavi – 2nd Place
- M. Dhuvaraka – 3rd Place
• 19-year category
- S. Kanimozhi – 1st Place
We extend our heartfelt congratulations to all the students on behalf of our foundation. It is noteworthy that such training programs not only help students express their skills but also significantly contribute to enhancing their inner personality and physical well-being.