தொலைநோக்கம் ஒன்றே….!

One ultimate goal

தூரநோக்கத்தின் அடிப்படையில் வேறுபட்டாலும் கூட தனிமனித வலுவூட்டலினூடான சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை ஏற்படுத்துவதே எமது அமைப்புகள் அனைத்தினதும் தலையாய குறிக்கோளாகும்.

அதன் பிரகாரம் விவேகானந்த குடும்பத்தின் நிறுவனங்களின் இவ்வருடத்திற்கான இரண்டாவது காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வானது எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது.

விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா உள்ளிட்ட எமது நிறுவனங்களின் அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் உரிய காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் காலாண்டுப் பகுதியில் எமது செயற்பாடுகள், அடைவு மட்டங்கள், ஒவ்வொரு அமைப்புக்களும் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டதோடு எமது எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

One ultimate goal…!

Despite differences in our long-term visions, bringing about transformative social and economic progress through individual empowerment remains the core objective of all our organizations.

In alignment with this, the second quarter review meeting of the Vivekananda family institutions for this year was held under the leadership of our Executive Director, Mr. K. Pratheeswaran, at our Vivekananda College of Technology.

All staff members from our institutions — including Vivekananda College of Technology, Vivekananda Community Foundation, and Amirda — participated in this event, where each organization presented its respective quarterly report.

During the session, we discussed our activities, achievements, and the challenges faced by each organization in this quarter, as well as deliberated on our future plans.