மனித நேயநம்பிக்கை நிதியத்தின் நிதி உதவியுடன் நடைபெறுகின்ற Office management & IT மாணவர்களுக்கான பெற்றோருடனான கலந்துரையாடல் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்கள் மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் முகாமையாளர் திரு.ராஜு கபீரியல் அவர்களினால் நடாத்தப்பட்டது.
இப் பயிற்சியின் நோக்கம், அதன் முக்கியத்துவம் மற்றும் இப் பயிற்சியின் நிதி வழங்குனர்கள் பற்றிய விபரங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டதோடு க.பொ.த உயர்தரத்தின் பின்னர் தமது வாழ்க்கையினை திட்டமிட்டு ஒரு சிறந்த எதிர்காலத்தினை அடைந்துகொள்வதுடன் அடிப்படையான கணினி அறிவினை வழங்கிடும் நோக்கிலே இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் விசேடமாக சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் மற்றம் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இளைஞர்களை பிரதேச செயலகத்தின் ஊடாக தேர்வு செய்தே பயிலுனர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.
இக் கலந்துரையாடலில் பயிலுனர்கள் மற்றும் பயிலுனர்களின் பெற்றோர்கள், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் போதனாசிரியர்கள் கலந்து கொண்டதோடு கல்லூரியின் ஒழுக்க விதி நடைமுறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல் வழங்கப்பட்டது.