இளைஞர்களின் தொழில்பாதைக்கு

உதவிகோரல் திட்டமுன்மொழிவு

செயற்றிட்ட பிரிவு : இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்

செயற்பாடு : இளைஞர், யுவதிகளை தொழில்கல்விக்கு தயார்ப்படுத்தலுக்காக வாழ்வியல் திறன்விருத்தி பயிற்சி

நியாயப்படுத்தல் :
புள்ளிவிபரத் தகவலின் படி 2021 இல் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 72.55% மாணவர்களே உயர்தரத்திற்கு தகுதியினை பெற்றனர். 2021 இல் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவர்களில் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள் 62.89% ஆகும். இதில் 22.58% மாணவர்களே பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்பட்டனர்.
இந்த தகவல்களை வைத்து பார்க்கும் போது பல்கலைக்கழக வாய்ப்பினை இழந்தவர்கள் மற்றும் உயர்தரம், சாதாரண தரம் சித்தியடையாதவர்களுமே அதிகமாக காணப்படுகின்றனர்.

இம் மாணவர்களின் தாழ்வுமனப்பாங்கு காரணமாக அனேகமான பெண்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்துவதுடன் இளவயது திருமணங்களுக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது. அவ்வாறே ஆண்கள் போதைவஸ்து மற்றும் ஏனைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது.
ஆனாலும் பாடாசலைக் கல்வியில் இடைவிலயகியோருக்காக இலங்கை அரசாங்கத்தில் மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி பயிற்சிகள் (TVET) நடைமுறைப்படுத்தப்பட்டு பட்டப்படிப்பு வரைக்குமான பல்கலைக்கழகமும் உள்ளது. அத்தோடு வெளிவாரியாக மற்றும் ஏனைய அரசசார்பற்ற அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் தமது உயர் கற்கை மற்றும் தொழில்கற்கைகளை தொடரலாம்.
வேதனையான விடயம் இவ்வாறான விடயங்கள் எமது சமூக மக்களிற்கு உரிய முறையில் தெளிவூட்டப்படும் வீதம் குறைவாக காணப்படுகின்றமையும், மாணவர்களின் கவலையீனமான மனநிலையும் காரணமாக பல்வேறு வாய்ப்புக்களையும், சந்தர்ப்பங்களை எமது சமூகம் இழந்து நிற்கின்றது.
இவற்றினை கருத்தில் கொண்டு விசேடமான எம்மால் வடிவமைக்கப்பட்ட பயிற்சியே வாழ்வியல் திறன்விருத்தி பயிற்சி (LifeSkill Development Training Programme)

செயற்படுத்தும் விதம் :
பிரதேச செயலாளரின் ஊடாக குறிப்பிட்ட பிரதேச செயலகங்களில் இவ்வாறான நிலையில் உள்ள இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு குடும்ப பொருளாதார நிலையினை அடைப்படையான வைத்து முன்னுரிமை அடிப்படையில் 25 தொடக்கம் 30 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் எமது பயிற்சி நிலையங்களில் உள்வாங்கப்பட்டு 3 மாதகால பயிற்சி வழங்கப்படும்.
ஆளுமைவிருத்தி, அடிப்படை கணினி மற்றும் அடிப்படை ஆங்கிலம் போன்ற விடயங்களுடன் இலங்கையின் கல்விமுறைகள் பற்றிய தெளிவுகள் வழங்கப்படும்.
பின்னர் குழு செயற்பாடாக பிரதேசத்தில் உள்ள பயிற்சி நிலையங்களிற்கு சென்று விபரங்களை பெற்று அவற்றினை காட்சிப்படுத்தி ஒப்புவிக்க வேண்டும்.
இறுதியாக தொழில்நுட்ப பயிற்சி அல்லது உயர்கற்கை ஒன்றை தெரிவு செய்து அதற்கான உறுதிப்பாட்டினை மேற்கொள்வதுடன் தொடர்ச்சியான எமது வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் தொழில்பயிற்சியினை மேற்கொள்வர்

பயனாளிகள் : க.பொ.த சாதராணதரம், உயர்தரம் சித்தியடையாதவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை இழந்தவர்கள்.

காலப்பகுதி : ஒரு பயிற்சி நிலையத்தில் 3 மாத காலப்பயிற்சியாக வருடத்திற்கு 4 தொகுதியினருக்கு வழங்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் அடைவு : பயிற்சியின் பின்னர் மனப்பாங்கு மாற்றத்தினை பெற்று, எதிர்கால வாழ்க்கை பற்றிய சிறந்த திட்டமிடலுடன் ஒரு தொழில் கல்வியினை தெரிவுசெய்து தொடர்ச்சியான ஒரு சிறந்த தொழில்பாதையினை அமைத்துக்கொள்வார்கள்

இந்த பயிற்சிநெறிக்கான உதவியினை வழங்கவிரும்பின் தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு : http://wa.me/+94776770780

மேலதிக தகவல்களுக்கு
க.பிரதீஸ்வரன்
நிறைவேற்று பணிப்பாளர்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
மட்டக்களப்பு.
+94777105569
kpratheeswaran@vcf.lk
www.vcf.lk

நன்கொடைகள் வழங்கிட

Donate Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *