பின்தங்கிய கிராமப்புறங்களில் காணப்படும் பெரும்பாலான பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவு மாத்திரமே காணப்படுகின்றது. இதனால் வெளிப்பாடசாலைகளுக்குச் சென்று கற்பதற்கான வசதிகளும் இல்லாத நிலையில் பல மாணவர்கள் அந்த பாடசாலையில் கலைப்பிரிவினையே தேர்ந்தெடுக்கின்ற போதிலும் பாடத்தெரிவினை மேற்கொள்ளும் போது இலகுவான பாடங்களான மொழிப்பாடம். அழகியற்பாடம். சமய நாகரீக பாடங்களையே அனேகமான மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
அதற்கமைவாக மட்/பட்/காக்காச்சிவட்டை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களின் கிதுசனா சுவாசவேர்கள் என்ற அமைப்பினால் அந்த கிராமப்பகுதியில் உயர்தரத்திற்கு செல்லவிருக்கும் மாணவர்களிற்கான விழிப்புணர்வுச் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்பாடசாலையின் பழைய மாணவர்கள் கலைத்துறையில் கணினி பாடம் ஒன்றை எடுத்ததன் காரணமாக பலர் தற்போது கணினி பட்டப்படிப்பு, டிப்ளோமா போன்றவற்றை வெளிவாரியாக மேற்கொண்டு வருவது ஒரு எடுத்துக்காட்டாக காணப்படுவதோடு, அவர்களின் அனுபவங்களை தமது பாடசாலையின் சகோதர மாணவர்களிற்கும் வழங்கி அவர்களை வழிப்படுத்த நினைப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
தொழில்துறை சார்ந்த பாடமாக காணப்படும் சமூக விஞ்ஞான அல்லது பிரயோக சமூக கற்கைப் பாடங்களான பொருளியல், கணக்கீடு, விவசாய விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், தொடர்பாடலும் ஊடக கற்கையும் போன்ற எதிர்காலத்தில் ஒரு தொழில்துறைக்கு ஏற்ற விதத்திலான பாடம் ஒன்றினையும் தெரிவுசெய்யுமிடத்து பல்கலைக்கழக பயிற்சித் தெரிவில் அதிகமான பயிற்சிகள், பல்கலைக்கழகங்களை தெரிவு செய்ய முடிவதோடு, பல்கலைக்கழக வாய்பினை இழந்தாலும் கூட தொடர்ந்து மவெளிவாரியாக தொழில்துறைக்கேற்ற விதத்தில் பட்டப்படிப்பினை அல்லது தொழில்ப்பயிற்சியினை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.