ஸ்தாபகரின் சேவையாளர்களுடனான கலந்துரையாடல்

ஸ்தாபகர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களால் விவேகனந்த தொழில் நுட்பவியல் கல்லூரி விஜயத்தினைத் தொடர்ந்து விவேகானந்த குடும்பத்தினருடான சந்திப்பினை மேற்க்கொண்டிருந்தார். இக் கலந்துரையாடலானது அமிர்தா நிறுவனத்தில் இடம்பெற்றது.

இதன்போது சேவையளர்களின் அறிமுகமும் நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலானது நிறைவேற்று பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையின் கீழ் நிதிப் பணிப்பாளர் திரு.எஸ்.புருசோத்மன், மற்றும் முகாமைத்துவ உறுப்பினர்கள், ஏனைய சேவையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முதலாவதாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் மூன்று நிலையங்களினதும் தொழில்பயிற்சி செயற்பாடுகள் பற்றிய விளக்கமானது திரு.த.சந்திரசேகரம் அவர்களின் வழிநடத்தலின் கீழ் திரு.சால்ஸ் கிரேசியன் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சமூக மாற்ற தன்னார்வ செயல்பாடுகள் பற்றிய விளக்கமானது திட்ட முகாமையாளர் திரு.சு.ராஜு கேப்ரியல் அவர்களின் வழிநடத்தலின்கள் கீழ் செல்வி.திலகராஜா சங்கியா அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமிர்தா நிறுவனத்தின் தொழில் விருத்திக்கான செயல்பாடுகள் பற்றி விளக்கமானது நிறைவேற்று அதிகாரி திரு.த.புவிதரன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் செல்வி.மரியா சுசந்திக்கா அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஸ்தாபகர் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய விளக்கங்களுடன் விவேகானந்தரின் சிந்தனை எவ்வாறு தோன்றியது மற்றும் சமுக நலன்புரி அமைப்பு மற்றும் விவேகானந்த பூங்கா தோன்றிய பின்னனி வரலாறும் கூறப்பட்டது.

விவேகானந்த குடும்பத்தின் செயல்பாடுகள் பற்றிய விளக்கங்களை அதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்த ஸ்தாபகர் அவர்களுக்கு விவேகானந்தர் குடும்பம் சார்பாக எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *