எமது கல்லூரியில் ஸ்மார்ட் வகுப்பறை நிர்மாணம்

மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது அடிப்படைக்கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவை மையப்படுத்தியதாகப் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில், மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் ஒரு செயற்பாடாக ஸ்மார்ட் வகுப்பறை ஒன்று உருவாக்கப்பட்டதோடு எமது கல்லூரியின் ஸ்தாபகர்.திரு.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது விவேகானந்த குடும்பத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், எமது அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர், சமூக நலன்புரி அமைப்பு உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் (NVQ Level 5) டிப்ளோமா பயிலும் மாணவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, மென்பொருட்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கணனிகளின் தரம், மற்றும் போதிய வசதிகள் இல்லாத வேளையில் எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஏற்றவகையில் தேவையான கணினிகள் மற்றும் Smart board, Server, Network Equipment போன்ற எமது தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் வண்ணம் இவ்வகுப்பறையானது வடிவமைக்கப்பட்டமை சிறப்பானதாகும்.

இச்செயற்பாட்டிற்கான நிதியுதவியினை விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கிய மனிதநேய நம்பிக்கை நிதியத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *