எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் மாவிலங்ககத்துறையில் கிராம அபிவிருத்திப் படையணியை உருவாக்குவதற்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை மாவிலங்கத்துறை கிராம சேவகர் தலைமையில் நடைபெற்றது.
இப் பயிற்சிப் பட்டறையில் பற்றிமாபுரம், மண்முனை மற்றும் மாவிலங்கத்துறையேன மூன்று கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதோடு தங்கள் கிராமங்களில் உள்ள பின்னடைவுகள் மற்றும் நடைமுறை பிரச்சினைகள் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. தனிமனித இலக்கு மற்றும் கிராமத்தின் இலக்கு பற்றியும் ஆராயப்பட்டதோடு சிறு செயற்பாடுகள் மூலமும் தெளிவூட்டப்பட்டது.
இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கிய கனடாவில் வசிக்கும் திரு.கோபால் பகீரதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்