எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பின்தள்ளப்பட்ட நிலையில் தேவைப்பாடுடைய மாணவர்களை இனங்கண்டு அவர்களின் கற்றலுக்கான மேலதிக ஊக்குவிப்புத்தொகை ஒன்றினை மாதாந்தம் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலில் ஒரு புதிய செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட 7 மாணவர்களுடனான கலந்துரையாடல் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களால் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இத்திட்டம் தொடர்பான பூரண விளக்கங்களும் வழங்கப்பட்டு எமது அறக்கட்டளையுடன் மாணவர்களுக்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.
இச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு துணை புரியும் மனித நேய நம்பிக்கை நிதியத்திற்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.