விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் கிராமங்களை நோக்கிய இளைஞர், யுவதிகளின் வலுவூட்டல் செயற்பாட்டின் ஒரு பகுதியாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்த சமுதாய கல்லூரியின் இன்னுமொரு செயற்பாடாக நேற்று 22.11.2024 திகதி வள்ளிபுனம் ரேடியன் நிலையத்தில் சிரட்டையிலான கைவினை ஆக்க பயிற்சி தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் அப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் தலைமைதாங்கும் குடும்ப பெண்கள் மற்றும் சுயதொழில் மேற்கொள்ள ஆர்வமாக உள்ள இளம்பெண்கள் என 20 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெண்களிற்கு இவ்வாறாக கழிவுப்பொருட்களை கொண்ட கைவினையாக்க உற்பத்திகளை பயிறுவிப்பதன் மூலமாக அவர்களிற்கு சுயதொழிலினை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் இச் செயற்பாட்டிற்கு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக புலம்பெயர் உறவுகள் உதவிக்கொண்டிருக்கின்றனர்.