எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது இல்லங்கள் மற்றும் சிறுவர் காப்பகங்களுக்கான பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
ஆகையால், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எம்முடன் இணைந்து பயணிக்கும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதன் பிரகாரம் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 13 சிறுமிகள் மற்றும் 10 முதியவர்களை உள்ளடக்கியதாக காணப்படுவதோடு அம்மாணவர்களுக்கான வகுப்புக்கள், வாழ்வியற் பயிற்சிகள், அவர்களுடனான விசேட நிகழ்வுகள் என பல்வேறு செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அவ்வாறே எதிர்வரும் வருடம் இம் மாணவிகளுக்கான விசேட வகுப்புக்கள், நாளாந்த உணவு போன்றவற்றையும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
🎯 நாளாந்த உணவு – ஒரு நாள் 20,000 LKR
🎯 மாணவி ஒருவரைப் பொறுப்பெடுத்தல் – மாதாந்தம் 3500 LKR
(ஒரு வருடத்திற்கான உதவித்தொகை – 42 000 LKR)
🎯 மேலதிக வகுப்பிற்கான ஆசிரியர் கொடுப்பனவு -15 000 LKR
தாய் தந்தையரைப் பிரிந்த நிலையில் குடும்ப சூழ்நிலையின் மத்தியில் இவ் இல்லத்தில் வசிக்கும் மாணவிகளைப் பொறுப்பெடுத்து மாதாந்தம் அவர்களின் கல்விக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் தாங்கள் முன்வந்து செய்யும் சிறிய பங்களிப்பானது அவர்களின் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்பதில் ஐயமில்லை.
மேலதிக தொடர்புகளுக்கு,
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை