பின்தள்ளப்பட்ட கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக் கூடாது என்னும் தொனிப்பொருளில் வருடாந்தம் பல்வேறு செயற்றிட்டங்களை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கும் செயற்பாட்டினை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் முன்னெடுத்திருந்தோம்.






அதனடிப்படையில்,
- மட்/காந்திபுரம் கலைமகள் வித்தியாலயம்,
- மட்/மமே/கித்துள் மகா வித்தியாலயம்,
- மட்/மமே/ கரடியனாறு மகா வித்தியாலயம்,
- மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயம்,
- புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயம்,
- செல்வாநகர் சிவா வித்தியாலயம்,
- இலுப்பட்டிச்சேனை அம்பாள் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக 200 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது நிதி அனுசரணையை வழங்கி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்டும் கல்வி செயற்பாட்டில் தமது பங்களிப்பை வழங்கிய எமது நன்கொடையாளர்களுக்கு எமது அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Extending a Hand for Education






With the theme that poverty should not become a barrier to the education of students in underprivileged rural schools, our Vivekananda Community Foundation has been implementing various annual initiatives.
Accordingly, in response to requests received from schools, we have undertaken the initiative of providing learning materials with the support of our diaspora community.
Based on this, learning materials for 200 students were provided through our foundation to meet the requests from the following schools:
- Bt/Kanthipuram Kalaimagal Vidyalayam
- Bt/Mame/Kithul Maha Vidyalayam
- Bt/Mame/Karadiyanaru Maha Vidyalayam
- Mavilangathurai Vigneswara Vidyalayam
- Puthukudiyiruppu Kannaki Vidyalayam
- Selvanagar Siva Vidyalayam
- Iluppaichchenai Ambal Vidyalayam
On behalf of our foundation, we extend our heartfelt gratitude to our donors who contributed financially to this educational initiative, illuminating the future of these students
For further details,
Administration,
Vivekananda Community Foundation,















