மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினூடாக பின்தங்கிய பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களில் தமது குடும்பப் பொருளாதார சூழ்நிலையின் காரணமாகப் பாடசாலைக்கல்வியைத் தொடரமுடியாத நிலையிலுள்ளவர்கள் மற்றும் கல்விக்கான உபகரணங்கள், பிரத்தியேக வகுப்புகள் போன்ற மேலதிக தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் கல்வியை இடைநிறுத்த எத்தனிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக அவர்களைப் பொறுப்பெடுத்து புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாதாந்தம் அவர்களது கல்விக்கான மேலதிக உதவித்தொகை வழங்கும் திட்டமானது முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை பிரதேசம் மற்றும் களுதாவளை பிரதேசத்திற்கு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மேலும் 7 மாணவர்கள் பொறுப்பெடுக்கப்பட்டு, அவர்களுக்கான முதற்கட்ட தொகையானது வழங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம், இந்த பிரதேசத்தில் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிறுத்தும் மாணவர்களுக்கு உதவியாக அமையும் என்பதே எமது நோக்கமாகும்.



இச்செயற்பாட்டிற்காக எமக்கு கரம் கொடுத்து 7 மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான உதவியை வழங்க முன்வந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.ரகுபதி நடராஜா அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அறக்கட்டளையின் தொடர்ந்த முயற்சிகள் இதுபோன்ற கல்வி சார்ந்த செயற்பாடுகளை மேலும் தொடர்வதற்கு எமது அறக்கட்டளையுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்
மேலதிக தொடர்புகளுக்கு,
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
Supporting Students through Financial Aid ..!



The Student Empowerment for Transformation initiative by the Vivekananda Community Foundation helps students from poor families who can’t continue their education due to financial difficulties. It also helps students who are at risk of dropping out because they can’t afford things like school supplies or private lessons. The foundation supports these students with monthly financial aid, made possible by donations from community members.
Recently, a field visit was made to the Mavilangathurai area, under the Arayampathy Divisional Secretariat & Kaluthavalai, where 7 more students were selected to receive help. They have now started receiving financial support, ensuring they can continue their education despite financial struggles.


We would like to thank Mr. Ragupathy Nadaraja from Australia for kindly donating a year’s worth of support for these 7 students.
We invite you to join us in continuing such important educational efforts.
For more information,
Administration,
Vivekananda Community Foundation