அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களுக்கான புத்தகப்பைகள்

School bags for the students of Annai Sri Sarada Nilayam

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 2020 இல் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள் என இன்று 60 மாணவிகளுக்கான தமது செயற்பாட்டை சாரதா நிலையம் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் Lyka Gnanam Foundation அமைப்பினரால் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் மாணவிகளுக்கான புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபரும் Lyka Foundation இன் உதவித் தலைவருமாகிய திரு.அருமைநாயகம் அவர்கள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.உமாமகேஸ்வரன் அவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.விஜயகுமார் அவர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுஜந்தன் அவர்கள் உள்ளிட்ட சாரதா நிலையத்தின் தலைவர், சேவையாளர்கள் மற்றும் மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இச் செயற்பாட்டினை முன்னெடுத்த Lyka Gnanam Foundation நிறுவனத்தினருக்கு சாரதா நிலையத்தின் மாணவிகள் சார்பாகவும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

School bags for the students of Annai Sri Sarada Nilayam

Annai Sri Sarada Nilayam, located in the Puthukudiyiruppu region of Mullaitivu, was established in 2020 by the Vivekananda Community Foundation. Since its inception, the center has been actively engaged in implementing a wide range of initiatives aimed at empowering young girls. With the support of diaspora well-wishers, the center currently provides services to 60 students, including the provision of nutritious meals, clothing, and special classes.

As part of these continued efforts, a special event was organized to distribute school bags to the students of Annai Sri Sarada Nilayam. This initiative was generously sponsored by the Lyka Gnanam Foundation. The event was graced by several distinguished guests including Mr. Arumainayagam, Government Agent of Kilinochchi District and Deputy Chairperson of Lyka Foundation; Mr. Umamaheswaran, Government Agent of Mullaitivu District; Mr. Vijayakumar, Divisional Secretary of Puthukudiyiruppu; and Mr. Sujanthan, Assistant Director of Planning. Also in attendance were the Chairperson, staff, and students of Sarada Nilayam.

On behalf of the students of Annai Sri Sarada Nilayam and the Vivekananda Community Foundation, sincere gratitude is extended to the Lyka Gnanam Foundation for their kind and generous support in making this initiative a success.