எமது சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் எதிர்கால சமூகத்தை வலுவூட்டும் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கில் தலைமைத்துவப்பயிற்சியானது தொடர்ச்சியான ஒரு திட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனடிப்படையில் இதற்கான அடித்தளத்தினை எம்மவரிடமிருந்தே ஆரம்பிக்கும் முகமாக 20 பேர் தெரிவு செய்யப்பட்டு தலைமைத்துவ பயிற்சியின் இரண்டாம் கட்டமானது இன்றைய தினம் இடம்பெற்றது.
எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட எமது அறக்கட்டளையின் சேவையாளர்கள், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள், அமிர்தா நிறுவனத்தின் சேவையாளர்கள் மற்றும் வாழ்வியலும் வழிகாட்டலும் பயிற்சியின் மாணவர்களும் இன்றைய தினம் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
மிகவும் பயனுள்ள முறையில் விளையாட்டுகள் மற்றும் பயனுள்ள செயற்பாடுகளூடாக இப்பயிற்சியானது வளவாளர் திரு.அருள்நிதி அவர்கள் மற்றும் திருமதி.ரேகா அருள்நிதி ஆகியோரால் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.இதற்காக எமது சமுதாய அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.